Product Description
மனிதனின் நினைவாற்றல் தொழில்நுட்பத்துடன் பின்னிப்பிணையும்படியான ஒரு உலகினை கற்பனை செய்து பாருங்கள்.
இந்தப் புத்தகத் தொடரும் அந்த கற்பனையை சார்ந்ததே, மனிதனின் அடிப்படைத் தேவைகள் மற்றும் தன் எதிர்காலத்தை வடிவமைக்க அவர்கள் தொழில்நுட்பங்களுடன் ஒன்றிணைய எவ்வாறு முயற்ச்சிக்கின்றார்கள் என்பதைப் பற்றியும் ஆராய்கிறது.
இப்புத்தகத்தின் கதை சிக்கல்கள் நிறைந்திருக்கும் உறவுகளின் கடந்த மற்றும் நிகழ்காலத்தைப் பற்றிக் கூறுகிறது. இக்கதையின் இந்த இணைப்புகள் நமது செயல்கள், அடையாளங்கள் மற்றும் நாம் செய்யும் தேர்வுகளை உருவாக்கி, உங்கள் மனதில் வியக்க வைக்கும் ஒரு புதிரை உருவாக்கும். இந்த சவாரஸ்யமான கதைக்களம் மன ஆரோக்கியம் மற்றும் மனித நடத்தையை பாதிக்கும் உளவியல் காரணிகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சுட்டிக்காட்டும்.
தங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களால் தொடங்கப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டத்தில் சிக்கிய இரண்டு இளம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், தங்களுக்கான பதில்களைத் தேடி தனித்தனிப் பாதையில் சென்று பின் இறுதியில் ஒன்றிணையும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இக்கதையில் காணலாம். அவர்களின் இந்தப் பயணத்தில் சந்திக்கும் பல்வேறு நபர்களின் வாழ்க்கைக் கதைகள், அனுபவங்கள் மற்றும் கண்ணோட்டங்களை கொண்டும் அவர்கள் இறுதியில் மனிதனின் மூளை மற்றும் நடத்தைகளை கையாளக்கூடிய ஒரு அற்புதமான தொழில்நுட்பத்தை கண்டறிகின்றனர்.
இந்தக் கதை, ஒத்துழைப்பின் சக்தி, பின்னடைவு மற்றும் நமது வாழ்வில் தொழில்நுட்பத்தின் ஆழமான தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருப்பினும், இந்த பிரபஞ்சத்தின் மர்மங்களை வெளிக்கொணர நவீன விஞ்ஞானம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. லட்சியம், ஒழுக்கம் மற்றும் வரம்பற்ற சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை மிகச்சரியான அளவில் ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு கதையில் பயணிக்க தயாராகுங்கள்.
About the Author:
இந்தியனாகவும், தமிழனாகவும், பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த பல்வேறுப்பட்ட மக்களுடன் பழகியதில் நான் அறிந்தது இந்த உலகம் ஒரு அழகான சாக்கடை. ஒவ்வொரு மனிதனின் தன்மனதில் கட்ட நினைக்கும் உலகத்தை என் கற்பனையில் கட்ட முயற்சிப்பதுத்தான் என்னுடைய இந்த பயணம். சிறு சிறு சிறுகதைகளை எழுத தொடங்கி என் நண்பர்களுடன், என் குடும்பத்தினருடன் பகிர தொடங்கினேன், அவர்களின் தொடர்ச்சியான ஊக்கத்துடன், "நினைவுகளின் சதுரங்கம்" என் முதல் புத்தகமாக உருவெடுத்துள்ளது.
புதிய தொழில்நுட்பங்கள் மீதான ஈர்ப்பு மற்றும் மனித உளவியலில் மீது எனக்கு இருந்த ஆர்வம், என் எழுத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
வங்கியில் வேலை பார்க்கும் நான், எழுத்தாளராக என் பயணத்தைத் தொடங்குகின்றேன். இப்போது என் உலகம் எண்களுக்கும் சொற்களுக்கும் இடையிலான சமநிலையைக் கண்டறிவதில் சுழல்கிறது.
என்ன தொடர்பு கொள்ள என்னோட வெப்சைட்டின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
Product Details
| Author: | Te Arvind |
|---|---|
| Publisher: | Indie Press |
| SKU: | 9789357768801 |
| EAN: | 9789357768801 |
| Language: | Tamil |
| Binding: | Paper Back |
Recently viewed
நினைவுகளின் சதுரங்கம் : ஞாபகம்! வரமா?சாபமா? (Ninaivugalin Sathurangam - Nyabagam! Varamaa? Saabama?)
Te Arvind